அதிகரிக்கும் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டவர் எண்ணிக்கை: ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகள்
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.
பிணைக் கைதிகள்
கடந்த மாதம் 7ம் திகதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதலை முன்னெடுத்தனர்.
இந்த தாக்குதலானது காசாவின் எல்லைப் பகுதியில் நடைபெற்ற சர்வதேச இசைக் கச்சேரியை குறிவைத்து நடத்தப்பட்டது.
இந்த திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், இஸ்ரேலியர்கள், மற்றும் பல வெளிநாட்டவர்கள் என மொத்தம் 240 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக காசாவுக்கு பிடித்து செல்லப்பட்டனர்.
40 பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு
இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை பிரான்ஸ் இண்டர் ரேடியோ நிலையத்திற்கு பிரதமர் எலிசபெத் போர்ன் அளித்த போட்டியின் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
The number of #French citizens killed in Hamas’ October 7 attacks on #Israel has risen to 40, French Prime Minister Elisabeth Borne told radio station France Inter on Monday.
Eight French citizens remain missing, with some of them believed to have been captured by Hamas, Borne… pic.twitter.com/EFwwivnW4L
— NEXTA (@nexta_tv) November 6, 2023
40 பேர் உயிரிழந்து இருப்பதுடன், 8 பேர் வரை காணாமல் போகி இருப்பதாகவும், அவர்களில் சில பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
240 பேர் ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவித்து இருந்த நிலையில், அவற்றில் எத்தனை பிரான்ஸ் நாட்டவர்கள் உள்ளனர் என்ற துல்லியமான பிரதமர் எலிசபெத் போர்னால் தெரிவிக்க முடியவில்லை.