80 வயது நபரையும் 26 வயது இளைஞனாக மாற்றலாம் – விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு!
முதியவர்களையும் இளைஞர்களாக மாற்றும் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதுமை ஆய்வு
பெரும்பான்மையான வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் முதுமை அடைவதை தடுக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் அது தொடர்பான ஆய்வுகளும் நடந்துகொண்டே வருகிறது.
அதன்படி, கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும் ஆய்வில், பன்றி ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை கொண்டு E5 எனப்படும் வயது எதிர்ப்பு சிகிச்சையை எலிகளுக்கு செய்து பார்த்துள்ளனர்.
எலிகளின் வயதை குறைக்கும் இந்த சோதனை 70 சதவீதம் வெற்றி அடைந்துள்ளதாகவும், மனிதர்கள் மீது சோதித்தால் 80 சதவீதம் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை வெற்றி பெற்றால் 90 வயது முதியவரையும் 26 வயது இளைஞராக மாற்ற முடியும் எனக் கூறியுள்ளனர். இந்த தகவல் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.