;
Athirady Tamil News

நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடி அச்சுறுத்தல்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

0

நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி, தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் நீதிபதிகளை குறிப்பிடுவது, போன்ற செயல்கள், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்காலக் குழுவொன்றை நியமிப்பது மற்றும் நீதிபதியின்; உத்தரவு தொடர்பில்,அமைச்சரவை அமைச்சர் ஒருவர் செய்த குற்றச்சாட்டுகளால் தமது சங்கம் கவலையடைந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

தண்டனைத் தடைகள்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவினால், சிறிலங்கா கிரிக்கட் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு, நலன்களுக்கு எதிரானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் நீதித்துறையின் சுதந்திரம் என்பது சட்டத்தின் ஆட்சியின் அடிப்படைக் கோட்பாடாகும்.

இந்தநிலையில், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை விசாரிக்க சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்றவர்கள்; நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் கருதுகிறது.

இந்தநிலையில் நீதித்துறையின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது நீதித்துறை அமைப்பின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். அத்துடன் நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தையும் நீதி அமைப்பின் ஒருமைப்பாட்டையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

எனினும், நீதித்துறைக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது எனக் கண்டறியப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட தண்டனைத் தடைகள் விதிக்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.