எயார் இந்தியா விமானம் மீது விடுக்க்பட்டுள்ள அச்சுறுத்தல்;கனடிய அரசாங்கம் விசாரணை
எயார் இந்தியா விமான சேவைக்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
கனடிய போக்குவரத்து அமைச்சர் பாப்லு ரொட்ரிகோஸ் மற்றும் கனடிய போலீசார் ஆகிய தரப்புகள் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எதிர்வரும் 19 ஆம் தேதி எயார் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என ஓர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
வான் போக்குவரத்து தொடர்பிலான எந்த ஒரு அச்சுறுத்தல்களையும் அரசாங்கம் எளிதில் கொள்ளாது எனவும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இணைய வழியாக பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கனடாவும் நேச நாடு நாடுகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கலிகிஸ்தான் அமைப்பினர் இந்தியாவிலிருந்து விலகி தனிநாட்டு கோரிக்கை முன்வைத்து வரும் நிலையில் இந்த குழுவின் அமெரிக்க பிரதிநிதி ஒருவர் இந்த அச்சுறுத்தலையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த காணொளியை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.