;
Athirady Tamil News

அமரர் இராசாத்தி அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவாக வன்னி எல்லைக் கிராமத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)

0

அமரர் இராசாத்தி அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவாக வன்னி எல்லைக் கிராமத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)
############################################

பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி
நேர்மையுடன் வாழ்ந்த எங்கள் அம்மா
காலத்தை வீணாக்காது கம்பீர நடையுடன்
உமது வாழ்நாளைப் போக்கி வந்தீரே..

எல்லோருடனும் இனிமையாய் பழகி
எம்மையும் இனிதாய் வழி நடத்தி வந்தீர்..

உள்ளத்தை ஒருங்கிணைத்து
ஒற்றுமையை வலுப்படுத்தி
உமக்கென சில உறவுகளையும் உருவாக்கி வந்தீரே..

இவற்றையெல்லாம் செய்து விட்டு எங்களுடன்
இருக்காமல் இறைவனின் அரவணைப்பை
எளிதில் நாடிச் சென்றதேனோ..

அச்சுவேலியைச் சேர்ந்த இராசாத்தி என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அமரர் திருமதி தர்மலிங்கம் நாகேஸ்வரி அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் தாயக பிரதேசங்களில் பல்வேறுதரப்பட்ட பணிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக அமரர் இராசாத்தி அவர்களின் பத்தாவது ஆண்டு ஆத்தமசாந்தி நினைவாக கோவில்குளம் சிவன் ஆலயத்தில் விசேட ஆத்ம சாந்தி பூசை நடைபெற்றது. அமரத்துவமடைந்த அமரர். இராசாத்தி அவர்களின் நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலில் அன்னாரின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு பொதுமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பலத்த மழைக்கு மத்தியிலும் சிரமங்களை பொருட்படுத்தாது இன்று (09.11) அமரர் இராசாத்தி அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவாக அவர்களது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் வன்னி எல்லைக் கிராமப் பிரதேசத்தில் உள்ள மிகவும் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள கிராமங்களில் வாழும் மிகவும் வறிய குடும்பங்களுக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவடட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில் கிராமிய ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

இவ்வாறாக பல்வேறு சமூகநலப் பணிகளோடு அமரர் இராசாத்தி என அழைக்கப்படும் திருமதி தர்மலிங்கம் நாகேஸ்வரி அவர்களுடைய பத்தாவது ஆண்டு நினைவு தினம் மிகவும் சிறப்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது

அமரர் இராசாத்தி அவர்களின் எட்டாமாண்டு நினைவாகவும் அதேவேளை எதிர்வரும் தீபாவளி தீபத் திருநாளை முன்னிட்டும் மேற்படி உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மற்றுமோர் கிராமத்தில் இதுபோன்ற உதவி வழங்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமரர் இராசாத்தி அவர்களின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் இவ்வனைத்து நிகழ்வுகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தியது. அந்தவகையில் நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரின் கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் எல்லோருக்கும் தாயக உறவுகளின் சார்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

குறிப்பாக இதனை முன்னின்று ஏற்பாடு செய்த அமரர்.இராசாத்தியின் மகனும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சுவிஸ் பிரதிநிதிகளில் ஒருவருமான பிரபல வர்த்தகரும், முருகன் தொண்டருமான சுவிஸ் தூணில் வதியும் ராஜு எனும் சுபாஸ்கரன் குடும்பத்தினருக்கும் எமது நன்றி.

அத்துடன் அமரர் இராசாத்தி அவர்களின் ஆத்மசாந்திக்காக எல்லாம்வல்ல பரம்பொருளை தாயக சொந்தங்களோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மனமுருகி வேண்டிக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
09.11.2023

அமரர் இராசாத்தி அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவாக வன்னி எல்லைக் கிராமத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.