கல்முனை முன்பள்ளி ஆசிரியர் சங்க விஷேட ஆசிரியர்தின விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்
சர்வதேச ஆசிரியர்தினத்தை முன்னிட்டு கல்முனை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர்தின விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நவம்பர் (10) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழா சமாதான பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.எச்.ஹிஜ்ரா, ஹுஸைனியா கிட்ஸ் மொண்டசோறியின் பணிப்பாளர் ஏ.எல்.நஸ்றீன் மற்றும் அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.எச்.எஸ்.சஹீறா ஆகியோரின் தலைமையில், கல்முனை கமு/கமு/ அல்-பஹ்றியா மகா வித்தியாலயக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களும், கெளரவ அதிதியாக ஏ.சீ.ஏ அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சீ.அலி சப்றி, விஷேட அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.ஜிஹானா ஆலிஃப், கல்முனை வலய பாலர் பாடசாலை கல்விப் பணியக வெளிக்கள உத்தியோகத்தர் அஷ்-ஷேய்க் ஐ.எல்.முஹம்மது அனீஸ், கமு/கமு/ அல்-பஹ்றியா மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தோடு இந்நிகழ்வில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும், பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.