கப்பம் கோரி சிக்கிய கிராம உத்தியோகத்தர்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஒருவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் இன்று(12) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகத் தலைவர் எனக் கூறி ஹோமாகம, சுவபுதுகம பிரதேசத்தில் வசிக்கும் முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய சுவபுதுகம கிராம உத்தியோகத்தர் மிரிஹான விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
சந்தேக நபர் சுமார் இரண்டு மாதங்களாக ஆசிரியைக்கு அவ்வப்போது தொலைபேசியில் செய்து பணம் கேட்டு அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளார்.
பின்னர் குறித்த ஆசிரியை பணிபுரியும் முன்பள்ளிக்கு அருகில் உள்ள அறிவிப்பு பலகைக்கு அருகில் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வைத்துவிட்டு செல்வதாக தெரிவித்து சந்தேகநபர் பணத்தை எடுத்துச் செல்ல வந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.