லொத்தர் சீட்டு இலக்கத்தை மாற்றிய படைவீரர் கைது
லொத்தர் சீட்டு இலக்கத்தை மாற்றிய படைவீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான லொத்தர் சீட்டு ஒன்றின் இலக்கத்தை நூதனமான முறையில் மாற்றியதாக படைவீரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இலக்கத்தை மாற்றி 2000 ரூபா பணப்பரிசில் வென்றதாக லொத்தர் சீட்டு முகவரிடம் பணம் பெற்றுக்கொள்ள முயற்சித்தார் என குறித்த படைவீரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லொத்தர் சீட்டு முகவர் குறித்த படைவீரரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த நபர் இதற்கு முன்னரும் ஹொரண பிரதேசத்தில் லொத்தர் சீட்டு முகவர் ஒருவரை ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.