ஐ.எம்.எப் இரண்டாம் கட்ட கடன் தொடர்பில் வெளியான தகவல்!
சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்த பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கடனை விடுவிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வருமான இலக்குகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனக் கடன் மறுசீரமைப்பு
அதுமட்டுமின்றி, சீனக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் நாணய நிதியத்திற்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துடன் அந்த ஆவணங்களும் ஒரே நேரத்தில் கிடைத்தால், அடுத்த மாதத்திற்குள் இரண்டாவது கடன் தவணை வழங்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு கடன் தவணையாக பெற வேண்டிய தொகை 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.