;
Athirady Tamil News

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

0

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சம்பந்தமாக சிவில் மற்றும் இதர தரப்புக்களுடன் கலந்துரையாடும் செயற்பாடுகளுக்காக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
தற்போது அனைத்து தரப்புகளின் அபிப்பிராயங்கள் மற்றும் முன்மொழிவுகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டு வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அடுத்துவரும் புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.