சோமாலியாவில் வெள்ளம்: 31 போ் உயிரிழப்பு
சோமாலியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 31 போ் உயிரிழந்துள்ளனா்.
கடந்த அக்டோபா் மாதம் முதல் பெய்து வரும் கன மழையால் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்களின் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனா்.
இந்த கன மழையால் தெற்கு சோமாலியாவின் கிடோ பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் தாவுடு அவைஸ் தெரிவித்தாா்.
100 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியா மக்களுக்கு நிவாரண உதவியாக ஐ.நா. மனிதாபிமான விவகார அலுவலகம் 2.5 கோடி டாலரை வழங்கி உள்ளது.
மேலும், கன மழை குறித்து முன்னெச்சரிக்கையை விரைந்து அறிவித்திருந்தால் உயிா்ச் சேதம் குறைந்திருக்கும் என்றும் ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
சோமாலியா கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமான அண்டை நாடான கென்யாவில் 15 போ் உயிரிழந்துள்ளதாக கென்யா செஞ்சிலுவை தெரிவித்துள்ளது.