;
Athirady Tamil News

நாடாளுமன்ற வளாகத்தில் தாக்கப்பட்ட டயானா கமகே: வெளிவரப்போகும் உண்மைகள்

0

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது, சபாநாயகரால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான அஜித் ராஜபக்சவினால் இன்று (14) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான உண்மைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியை இழப்பு
இதன்படி சமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, கயந்த கருணாதிலக, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சட்டத்தரணி தலதா அத்துகோரள மற்றும் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல ஆகியோர் உரிய குழுவில் அங்கம் வகித்தனர்.

மேலும், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஏதேனும் ஒரு தரப்பினர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மூன்று மாத காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.