திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம் – டிக்கெட் ஓப்பனிங் எப்போ?
கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
தீபத்திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 2 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கோவில் கொடிமரம் முன்பு ஓன்றன் பின் ஒன்றாக பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியவுடன் அண்ணாமலையார் சந்நதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் காலை 05:30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.
டிக்கெட்
இந்நிலையில், வருகிற நவம்பர் 23 ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். நிறைவு நாளான 10 நாள் நவம்பர் 26- ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.
பரணி தீபத்துக்கும், மகா தீபத்துக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 24-ம் தேதி கோவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இந்தமுறை முறைகேடுகள் தடுப்பதற்காக கட்டளைதாரர், உபயதாரர்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டில் சிப் பொருத்தி வழங்கப்பட உள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.