;
Athirady Tamil News

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

0

வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்கடந்த (05.11.2023) ஆம் திகதி மயிலத்தமடு,மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

முறக்கொட்டாஞ்சேனை மாரியம்மன் ஆலய முன்றிலிலிருந்து பேரணியொன்றை ஆரம்பித்த மாணவர்கள் சித்தாண்டியில் கால்நடை பண்ணையாளர்களின்போராட்டம் நடைபெறும் இடம்வரையில் சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மீண்டும் விசாரணை
இந்த போராட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமது பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களை வந்தாறுமூலை,களுவன்கேணி பகுதியில் இடைமறித்த சந்திவெளி பொலிஸார் அவர்களில் ஆறு பேரை கைதுசெய்தனர்.

அவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.