;
Athirady Tamil News

மருத்துவமனைக்குள் புகுந்து மர்ம நபரின் வெறிச்செயல்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்

0

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மருத்துவமனைக்குள் நுழைந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உளவியல் மருத்துவமனை
பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையை அடுத்து, அந்த நபர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கான்கார்ட் பகுதியில் அமைந்துள்ள நியூ ஹாம்ப்ஷயர் உளவியல் மருத்துவமனையிலேயே வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் நடந்துள்ளது.

தகவல் அறிந்த பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்ததுடன், துப்பாக்கிதாரியின் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் மாகாண பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் எண்ணிக்கை
துப்பாக்கிதாரி மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் என எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நியூ ஹாம்ப்ஷயர் மருத்துவமனையானது மனநோயால் போராடும் நோயாளிகளைக் கையாளும் ஒரு மனநல மருத்துவமனை என்றே கூறப்படுகிறது.

மேலும், 184 நோயாளிகளுக்கு படுக்கை வசதியும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நோயாளி ஒருவரும் தாக்குதல்தாரியும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.