1 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள்; இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவிப்பு!
கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் குழுவால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியால இஸ்ரேல் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.
இரு தரப்புக்குமான போரில் காசா உருக்குலைந்து போயுள்ளதுடன் 10 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அல் ஷிஃபா மருத்துவமனை
இந்நிலையில் காசா பகுதியில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையின் அனைத்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களை 1 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அல் ஷிஃபா மருத்துவமனையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அல் ஷிஃபா மருத்துவமனையின் வைத்தியர்கள் 1 மணி நேரத்திற்குள் அனைவரையும் வெளியேற்றுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.