;
Athirady Tamil News

அமேசன் நிறுவனம் அதிரடி : நூற்றுக்கணக்கானோர் பணிநீக்கம்!

0

அமேசன் நிறுவனம் அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

கொரோனா பரவலிற்குப் பின்னர் உலகிலுள்ள முன்னணி நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அலெக்ஸா பிரிவில்
இந்நிலையில், பிரபல நிகழ்நிலை வர்த்தக நிறுவனமான அமேசன் தனது அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

அலெக்ஸா பிரிவின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பணிபுரிபவர்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும்பொருட்டு இந்த ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமேசன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசன் ஊழியர்கள்
இதற்கு முன்னரும் கடந்த வாரமளவில், அமேசன் நிறுவனம் தனது இசை மற்றும் விளையாட்டு பிரிவுகளிலுள்ள, சில மனிதவளப் பணிகளிலும் வேலையாட்களில் குறைப்புகளைச் செய்திருந்தது.

உலகளவில் 50 கோடிக்கும் அதிகமான அலெக்ஸா கருவிகளை விநியோகம் செய்துள்ள அமேசன் நிறுவனம் தற்போது ஆட்குறைப்பு செய்தமையினால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அமேசன் ஊழியர்கள் பலர் தமது வேலையை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.