;
Athirady Tamil News

மூத்தோர் தடகள போட்டியில் சாதனை படைத்துள்ள இலங்கை வீராங்கனை!

0

இவ்வாண்டிற்கான (2023) தேசிய முதுநிலை மற்றும் மூத்தோர் தடகள போட்டி ( National Masters & Seniors Athletics) அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைப்பெற்றது.

இப்போட்டியில் இலங்கை சார்பில் அகிலத்திருநாயகி கலந்துக்கொண்டு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தராவார்.

இவர் தேசிய முதுநிலை மற்றும் மூத்தோர் தடகள போட்டியில் ( National Masters & Seniors Athletics) போட்டியில் பங்கேற்று 02 தங்கம் மற்றும் ஒரு வெங்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

1500m ஓட்டப்போட்டி மற்றும் 5000m விரைவு நடைப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்று 02 தங்கப் பதக்கங்களையும் 800m ஓட்டப் போட்டியில் வெங்கலப் பதக்கத்தையும் 5000m ஓட்டப் போட்டியில் பங்குப் பற்றி நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.