;
Athirady Tamil News

இறந்த பிறகும் பிறர் கடன் தீர்க்க ரூ. 7 கோடிக்கு மேல் திரட்டிய பெண்!

0

நியூயார்க்கில் தனது சொந்த மரணத்தை சோஷியல் மீடியாவில் அறிவித்த பெண் ஒருவர், தான் இறந்த பிறகும் பிறர் கடன் தீர்க்க மிகப்பாரிய செயலை செய்துள்ளார்.

கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 38 வயதான பெண், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இன்னும் பல மக்கள் தங்கள் மருத்துவக் கடனை அடைக்க உதவுவதற்காக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இதன்மூலம் அவர் இறந்த ஒரு வாரத்தில் 200,000 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.7.20 கோடி) மேல் திரட்டியுள்ளார்.

நவம்பர் 12 அன்று கேசி மெக்கிண்டயர் இறந்தார். அதிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது சமூக ஊடக கணக்குகளில் ஒரு பதிவு தோன்றியது.

அதில், “என் நண்பர்களுக்கு ஒரு குறிப்பு: நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன். காரணம் நான்காம் நிலை கருப்பை புற்றுநோய்” என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

“நான் உங்கள் ஒவ்வொருவரையும் முழு மனதுடன் நேசித்தேன், நீங்கள் என்னை எவ்வளவு ஆழமாக நேசித்தீர்கள் என்பது எனக்கு உறுதியாக தெரியும்.” என்று கூறினார்.

அந்தப் பதிவில், தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளின் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான நன்கொடைகளை கேட்டார். அவரது பதிவால் உருக்கமடைந்த பலர் இந்த பிரச்சாரத்திற்கு நன்கொடைகளை வழங்கியவண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், ஞாயிறு காலை நிலவரப்படி, இந்த பிரச்சாரத்திற்கு கிட்டத்தட்ட 220,000 அமெரிக்க டொலர் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

இறந்த பிறகும் பலரது கடனை அடைக்க உதவிய அப்பெண்ணை பலரும் போற்றி வருகின்றனர்.

தனது மரணம் குறித்த சோகமான செய்தியுடன் கேசி மெக்கிண்டயர் தனது அன்புக்குரியவர்களுடன் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பெரும்பாலான படங்களில் அவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் காணப்படுகிறார்.

கேசி மெக்கிண்டயருக்கு ஆண்ட்ரூ கிரிகோரி என்ற கணவரும், ஒன்றரை வயதில் கிரேஸ் என்ற மகளும் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.