சமிக்ஞை விளக்குகள் பழுது
யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகள் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சுமார் இரண்டு வாரங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதனால் வாகனச் சாரதிகள் சமிக்ஞை விளக்குகள் செயற்படுகின்றனவா இல்லையா என்ற சந்தேகத்தில் வீதியை கடப்பதனால் விபத்துக்கள் ஏற்பட கூடிய ஏது நிலைகள் காணப்படுகின்றன.
எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி வீதி சமிக்ஞை விளக்கினை திருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.