;
Athirady Tamil News

வளவை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் வெள்ளத்தில் மூழ்கிய கட்டிடங்கள்

0

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் வளவை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் பாரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் வளவை ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.

அரச வைத்தியசாலையும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம்
அதன்படி தேரபுத்த ஆரம்ப பாடசாலை கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பாடசாலை மூடப்பட்டுள்ளது.

அத்துடன் அம்பாந்தோட்டை அரச வைத்தியசாலையும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதால் நோயாளிகளை உடனடியாக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.