29 பேரை கடித்து குதறிய தெரு நாய்; ரேபிஸ் இருப்பது உறுதி – பரபரப்பு தகவல்!
தெருநாய் ஒன்று ஒரு மணி நேரத்திற்குள் 29 பேரை கடித்தது.
தெருநாய் அட்டகாசம்
வடசென்னை, ராயபுரம் பகுதியில் ஜிஏ சாலையில் தெருநாய் ஒன்று ஒரு மணி நேரத்திற்குள் 29 பேரை கடித்தது. சாலையில் படுத்திருந்த நாய், திடீரென அவ்வழியாக சென்றவர்களை தாக்கி, அவர்களின் கணுக்கால் மற்றும் கால்களைக் கடித்துள்ளது.
உடனே, அப்பகுதி மக்கள் அந்த நாயை அடித்துக் கொன்றனர். தொடர்ந்து இறந்த நாயின் உடலை மீட்ட மாநகராட்சி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.
ரேபிஸ் உறுதி
இதற்கிடையில் நாய் கடியால் பதிக்கப்பட்ட 24 பேரிடம் மூன்று வகை கடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்களில் 10 பேர் பள்ளி மாணவர்கள். வயதான சிலர் நாய் கடிக்கு பயந்து ஓடியபோது கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.’
இதையடுத்து நாய் கடித்து சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.