;
Athirady Tamil News

இந்த 6 நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழையலாம்!

0

கடந்த 2019 ஆண்டு சீனாவிலிருந்து உலகளவில் பரவிய கோவிட் வைரஸ் அடுத்த சில ஆண்டுகள் உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தது.

இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 1-ம் திகதியில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்கனவே இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.