Google Map ஐ நம்பி குறுக்குவழியில் போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியில் சென்றவர்கள் பாலைவனத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
லாஸ் வேகாஸிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்த குழு ஒன்று ,போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியில் சென்றுள்ளனர்.
பாலைவனத்திற்கு அழைத்துச் சென்ற Google Map
பாதை கரடுமுரடான மண் சாலையாக இருந்தாலும் கூகுள் மேப் மீது உள்ள நம்பிக்கையில் காரை ஓட்டிச் சென்ற நிலையில் இறுதியில் அந்தப் பாதை அவர்களை நெவாடா பாலைவனத்திற்கு அழைத்துச் சென்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் பாலைவனத்தில் இருந்து வந்த வழியே திரும்பிச் செல்ல முடியாதபடி கார் மணலில் சிக்கிக் கொண்டதால் ஒரு ட்ரக்கை வரவழைத்த குழுவினர் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.