சவுதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர் விசா பெற குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயம்
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர் விசா பெற குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருமணமாகாத சவுதி பிரஜைகள் வெளிநாட்டில் இருந்து வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு குறைந்தபட்சம் 24 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்று சவுதி வெளிநாட்டு ஆட்சேர்ப்பு துறையின் Musaned தளம் அறிவித்துள்ளது.
ஓட்டுநர்கள், சமையல்காரர்கள், தோட்டக்காரர்கள், குழந்தை பராமரிப்பாளர் மற்றும் பிற வீட்டுப் பணியாளர்கள் போன்ற வீட்டுப் பணியாளர்களுக்கான விசாவிற்கு விண்ணப்பிக்க திருமணமாகாத ஆண்/பெண் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 24 ஆண்டுகள் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
24 வயதுக்கு குறைவான விண்ணப்பம் இருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் வீட்டுப் பணியாளர் விசாவுக்கான தகுதியை சரிபார்த்துக்கொள்ளலாம் என்று தளம் தெளிவுபடுத்தியுள்ளது.
பூர்வீகவாசிகள், வளைகுடா நாட்டவர்கள், குடிமகனின் மனைவி, குடிமகனின் தாய் மற்றும் பிரீமியம் குடியிருப்பாளர்கள் வீட்டுப் பணியாளர் விசாவைப் பெறலாம்.
Musaned platform என்பது வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்புத் துறையை கண்காணிக்கவும் மேம்படுத்தவும் மனித வள அமைச்சகத்தின் முன்முயற்சிகளில் ஒன்றாகும். வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளை இது குறிப்பிடுகிறது.