கனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதி எது தெரியுமா : ஆய்வில் வெளியான தகவல்!
கனடியன் ரிசர்ச் இன்சையிட் கவுன்ஸில் எனும் அமைப்பானது கனடாவில் கோபமான மக்கள் வாழக்கூடிய பகுதியினை கண்டறிவதற்காக ஓர் ஆய்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, கனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாய்வின் படி மேலும் அறியத்தருகையில்,
மக்கள் அதிருப்தி
“வீடமைப்பு, பணவீக்கம் மற்றும் அரசியல் போன்ற விடயங்களில் மக்கள் அதிருப்தி நிலையில் உள்ளனர்.
அண்மைகாலமாகவே கனடாவில் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமையினை அவதானிக்க கூடியதாகவே உள்ளது.
இந்நிலையிலேயே, அதிகம் கோபமான மக்களை கொண்ட மாகாணமாக, அல்பர்ட்டா இனங்காணப்பட்டுள்ளது.
இரண்டாவது அதிக கோபமான மக்கள் வாழும் பகுதியாக ஒன்றாரியோ மாகாணம் கருதப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, அட்லாண்ட்டிக் கனடா முன்றாம் நிலையை தக்கவைத்துள்ளது.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.