கொழும்பில் களையிழந்த மாவீரர் நாள் நினைவேந்தல்
மாவீரர் நாளுக்கான எந்தவொரு நினைவேந்தல்களும் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஏற்பாடு செய்யப்படவில்லை என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
தயாராகும் தமிழர் தாயகம்
தமிழர் தாயகம் மட்டுமன்றி தமிழ் மக்கள் பரந்து வாழும் தேசமெங்கும் தேசிய நினைவெழுச்சி நாளான மாவீரர் நாளை கடைப்பிடிக்க மக்கள் தாயாராகி வருகின்றனர்.
வடக்கு கிழக்கில் காவல்துறையினர் மாவீரர் நாளுக்கு தடைகோரிய மனுக்கள் நீதிமன்றங்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இறந்தவர்களை நினைவு கூருவதை எவராலும் தடை செய்ய முடியாது என்ற அடிப்படையில் நீதிமன்றங்கள் மாவீரர் நாளுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.