;
Athirady Tamil News

யாழ் காங்கேசன்துறையில் களவுபோகும் பெறுமதியான தூண்கள்!

0

யாழ்ப்பாணம் பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான பெறுமதியான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

இது தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் மற்றும் , காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என பிரதேசமக்கள் விசனம் தெரிவித்தனர்.

அத்துமீறி நுழையும் திருடர்கள்- கண்டுகொள்ளாத பொலிஸார்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அருகில் உள்ள துறைமுக அதிகார சபையினருக்கு சொந்தமான காணியில் பெரியளவிலான சீமெந்து தூண்கள் காணப்படுகின்றன.

அவை துறைமுக அபிவிருத்திக்காக கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. இடப்பெயர்விற்கு முன்னரே குறித்த தூண்கள் அருகிலுள்ள ஐயனால் ஆலயத்தினை சுற்றி பாதுகாப்பு மதிலாக காணப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட பிரதேசங்களில் இராணுவத்தினர் தற்போது அங்கிருந்து வெளியேறிய நிலையில் அவ்விடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் துறைமுக அதிகார சபையின் காணிக்குள் அத்துமீறி நுழையும் திருடர்கள் அங்கு காணப்படும் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான தூண்களை உடைத்து கம்பிகளை களவாடி செல்கின்றனர்.

அதேவேளை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உப அலுவலகம் மற்றும் பிரதேச கிராம அலுவலர் அலுவலகம் என்பன , இரும்பு திருட்டு நடைபெறும் காணிக்கு அருகில் அமைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.