அமெரிக்க இளம் வாக்காளர் மத்தியில் வலுவிழக்கும் ஜோ பைடன்!
அமெரிக்காவின் இளம் வாக்காளர்கள் மத்தியில் அதிபர் ஜோ பைடனிற்கான ஆதரவு வேகமாக வீழ்ச்சியடைவதோடு, டொனால்ட் டிரம்பிற்கான ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியுயோர்க்டைம்ஸ் மேற்கொண்ட கருத்து கணிப்பின் ஊடாகவே, இத்தகவல் வெளியாகியுள்ளது.
நியுயோர்க்டைம்சின் தகவலின் படி,
வாழ்க்கை செலவு அதிகரிப்பு
“பெருமளவு இளைஞர்கள் அவரை விரும்பவில்லை. பைடனின் வயதும் அதிகரித்துவரும் வாழ்க்கைசெலவும் 18 முதல் 34 வயதான வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைவதற்கு காரணம்.
அத்துடன், பைடன் மற்றும் கமலா ஹாரிசிற்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் டொனால்ட்டிரம்பிற்கான ஆதரவு அதகரித்து வருகின்றது.
இதன்படி, 18 முதல் 34 வயதானவர்கள் மத்தியில் டிரம்பிற்கு 46 வீத ஆதரவும் பைடனிற்கு 42 வீத ஆதரவும் காணப்படுகின்றது.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.