மர்ம நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம்… வேற்றுகிரகவாசிகள் என நம்பும் கிராம மக்கள்
கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் குடும்பம் ஒன்று மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராம மக்களால் வேற்றுகிரகவாசிகள் என அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விசித்திர வியாதியால்
மொத்தம் 12 பேர்கள் கொண்ட அந்த குடும்பத்தில் ஐவர் மட்டும் இந்த விசித்திர வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பரந்த கண்கள், அதிகமாக வளர்ந்த கன்னத்து எலும்புகள், புடைத்த மூக்கு மற்றும் மோசமான பல் வரிசை என விசித்திரமாக காணப்படுகின்றனர்.
ஆனால், எஞ்சிய 7 சகோதரர்களுக்கு இது போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்றே கூறப்படுகிறது. மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஐவரும் குழந்தை பருவத்தில் இருந்தே இந்த நிலையில் உள்ளனர்.
மட்டுமின்றி, கேலி, கொடூரமான தாக்குதல் மற்றும் வேற்றுகிரகவாசிகள் என்றே கிராம மக்கள் நம்பியுள்ளனர். ஒருகட்டத்தில் தாங்கள் வேற்றுகிரகவாசிகள் என நம்பத்தொடங்கியதாகவும் அந்த ஐவரும் தெரிவித்துள்ளனர்.
எந்த சிகிச்சையும் இல்லை
ஆனால், சில நல்லவர்கள் தங்களை ஆதரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் முக குறைபாடுகள் தவிர, தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், தலைச்சுற்றல் மற்றும் உடல்வலி ஆகியவற்றால் இந்த ஐவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், சிகிச்சை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் இவர்கள் முன்னெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், இவர்களை வேலைக்கு அமர்த்த பலரும் மறுத்துள்ளனர்.
மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், துரதிர்ஷ்டவசமாக, இந்த நோயை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை, ஆனால் அறிகுறிகளை கட்டுப்படுத்த சிகிச்சை முன்னெடுக்கலாம் என்றார். தற்போது சிகிச்சைக்கான செலவுகளுக்காக பொது மக்களின் நிதியுதவியை இந்த குடும்பம் நாடி வருகிறது.