இஸ்ரேலின் முதன்மை பாதுகாப்பான “அயர்ன் டோமில்” செயல்பாட்டு குளறுபடி: டெல் அவிவ் நகரை தாக்கிய ஏவுகணைகள்
இஸ்ரேலின் பாதுகாப்பு அரண்ணான “அயர்ன் டோம்” ஏவுகணை தடுப்பு அமைப்பில் மீண்டும் செயல்பாட்டு குளறுபடி ஏற்பட்டு உள்ளது.
அயர்ன் டோம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான 6 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இரு பிரிவினரும் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
காசாவில் இஸ்ரேலிய ராணுவம் மீண்டும் தரைப்படை நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
அதே சமயம் நேற்று காலை முதல் காசா நகரில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட சில நகரங்கள் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ஆனால் ஹமாஸ் படையினர் ஏவிய அத்துனை ராக்கெட்டையும் இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணை தடுப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளது.
செயல்பாட்டில் குளறுபடி
இந்நிலையில் ஹமாஸ் படையினருடனான போர் தொடங்கிய பிறகு இரண்டாவது முறையாக இஸ்ரேலின் பாதுகாப்பு அரண்ணான “அயர்ன் டோம்” ஏவுகணை தடுப்பு அமைப்பில் செயல்பாட்டு குளறுபடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அயர்ன் டோமின் டாமிர் ஏவுகணை தவறுதலாக சுடப்பட்டு அவை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரையே தாக்கியுள்ளது.
போர் தொடங்கிய பிறகு கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான டாமிர் ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவி இருப்பது குறிப்பிடத்தக்கது.