சாதாரண தரப்பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்ற 9ஆம் வகுப்பு மாணவன்
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் சிறந்த சித்திகளை பெற்றுள்ளார்.
தனமல்வில தேசிய பாடசாலையில் 09 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவர் ஒன்பது பாடங்களிலும் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
9ஏ சித்திகளை பெற்றவர் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த அகில ஜெயலங்க விஜேதுங்க என்ற மாணவராகும்.
பரீட்சை பெறுபேறு
அகில, 2024ஆம் ஆண்டிலேயே சாதாரண தரப் பரீட்சை எழுத வேண்டியவராகும். அதையும் மீறி அதிபரின் அனுமதியுடன் 2022ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றி இந்த சித்தியை பெற்றுள்ளார்.
அகிலவின் தந்தை சரத் விஜேதுங்க ஒரு இராணுவ சிப்பாய் மற்றும் தாயார் நிலாந்தி மங்கலிகா சமரசிங்க ஒரு இல்லத்தரசி ஆவார்.
உயிரியலில் உயர்நிலைப் பட்டப்படிப்பை படித்து மருத்துவராகி தனமல்விளை போன்ற தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அகிலவின் எதிர்கால இலட்சியம் என குறிப்பிட்டுள்ளார்.