;
Athirady Tamil News

புலம்பெயர்ந்தவர்கள் வருகை குறைக்க பிரித்தானிய அரசு நடவடிக்கை: விசா நிபந்தனைகள் அறிமுகம்

0

பிரித்தானிய அரசாங்கம் புலம்பெயர்ந்வர்கள் வருகையை குறைப்பதற்கான கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ரிஷி சுனக் அறிவிப்பு
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

பிரித்தானியாவில் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, 2022ல் நிகர இடம்பெயர்வு 7,45,000 ஆக உயர்ந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் குடியேற்றங்கள் அதிக அளவில் உள்ளது, அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறோம்.

இந்த நடவடிக்கைகள் பிரித்தானியாவுக்கு நன்மை தரும். மேலும் பிரித்தானிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு புலம்பெயர்தலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரிஷி சுனக் x தளத்தில் தெரிவித்துள்ளார்.

விசா நிபந்தனைகள்
அதன்படி, வெளிநாட்டுப் பராமரிப்புப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வர முடியாது. தொழிலாளர் விசா விண்ணப்பத்திற்கான வரம்பு £26,200 இலிருந்து £38,700 ஆக உயர்வடைந்துள்ளது.

குடும்ப விசாவிற்கான குறைந்தபட்ச விண்ணப்பத்திற்கான வரம்பு £18,600 இலிருந்து £38,700 ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் பொருளாதார ரீதியான ஆதரவு தரக்கூடியவர்கள் மட்டுமே பிரித்தானியாவுக்கு அழைத்து வர முடியும்.

அத்துடன் மாணவர்களுக்கான விசா நடைமுறையிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோதமாக படகுகளில் குடியேறும் நபர்களின் வருகையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.