தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும், எதிர்கட்சிகள் வலியுறுத்தல்!
மிக்ஜம் புயலால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள சென்னைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனே செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
மழையால் நீரில் மூழ்கியுள்ள சென்னைக்கு உடனடியாக உதவிகளைச் செய்து தரவேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளார்.
40 ஆண்டுகளில் மிகப்பெரிய புயலான இந்த மிக்ஜம், தமிழகத்தின் தெற்குப்பகுதிகளை பெரும்பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மத்திய அரசு உடனடியாக சேதங்களை மதிப்பிட்டு நடவடிக்கைகள் எடுக்க ஒரு குழுவினை அனுப்ப வேண்டும் என சிபிஐஎம் பாராளுமன்ற உறுப்பினர் பிஆர். நடராஜன் கூறியுள்ளார்.
இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தமிழகப் பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் தமிழக முதல்வர் ரூ.5000 கோடி இடைக்கால நிவாரண உதவியைக் கேட்டுள்ளார் எனப் பாராளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.
புயலின் தாக்கம் மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் காணொளியில் பேசிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.