;
Athirady Tamil News

அமைப்பின் தலைவரை வீட்டில் புகுந்து சுட்டுக்கொன்ற நபர்கள்! என்கவுண்டர் செய்ய வேண்டும் என வெடித்த போராட்டம்

0

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதால் போராட்டம் வெடித்துள்ளது.

சுட்டுக்கொலை
ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பில் இருந்து 2015ஆம் ஆண்டில் பிரிந்து, ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பை தொடங்கியவர் சுக்தேவ் சிங் கோகமெடி.

நேற்று முன்தினம் இவரை காண வந்த மூன்று பேர், வீட்டிற்குள் சுக்தேவுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் சுக்தேவ் சிங் கோகமெடியும், அவருடன் இருந்த நவீன் சிங் ஷெகாவத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மாநிலம் முழுவதும் போராட்டம்
இச்சம்பவம் ராஜபுத்ர சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் மாநிலம் போராட்டங்கள் தொடங்கியது.

முழு அடைப்பு போராட்டங்கள் நடந்த நிலையில், சுக்தேவ் சிங்கை கொலை செய்த நபர்களை கைது செய்ய வேண்டும் அல்லது என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக சாலைகளில் திரண்ட போராட்டக்காரர்கள் டயர்களை எரித்தும், கோஷங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பொறுப்பேற்ற நபர்
இதனால் ஜெய்ப்பூர் உட்பட பல நகரங்களில் பாடசாலைகள் மூடப்பட்டன. அத்துடன் போராட்டக்காரர்கள் பல இடங்களில் தண்டவாளங்களில் இறங்கி ரயில்களை மறித்தனர்.

இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலமே பதற்றத்தில் இருந்தது. ரோஹித் கோதாரா என்ற நபர் சுக்தேவ் சிங் கொலைக்கு பொறுப்பேற்று, தன்னுடைய எதிரிகளை ஆதரித்ததற்காக இவ்வாறு செய்ததாக அவர் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

சுக்தேவ் சிங் கொல்லப்பட்டபோது அவரது பாதுகாவலர்கள் கொலையாளிகளில் ஒருவரை சுட்டுக்கொன்றனர், ஏனைய இருவர் தப்பியோடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.