;
Athirady Tamil News

சென்னைக்கு அடுத்த புயல் வரப்போகிறதா? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவசர விளக்கம்

0

சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மீளாத நிலையில் அடுத்த புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவசர விளக்கம் அளித்துள்ளார்.

மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் சூழ்ந்ததால் 4 நாள்களாக தீவு போல காட்சியளிக்கிறது. இதனால், மக்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்து சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மக்களுக்கு தேவையான உணவுகள் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசிடம் ரூ.5, 060 கோடி இழப்பீடு தொகை கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த புயலா?
இந்நிலையில், சென்னைக்கு மீண்டும் அடுத்த புயல் வருகிறது என்று தகவல்கள் பரவியுள்ளது. இதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வரும் என்ற வதந்தி அடிப்படை ஆதாரமற்றது. இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம். 10 -ம் திகதி அரபிக் கடலில் சில வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கலாம்.

அது இந்திய கடற்கரையை விட்டு நகரும். இதற்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது” என தெளிவாக கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.