அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி முன்னிலை
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி நான்காவது விவாத நிகழ்ச்சியில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டிற்கான அதிபர் தேர்தலில் முன்னான் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி ஆகியோர் போட்டியிட உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அமெரிக்க அதிபர்த் தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள், கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதால், பிரசாரத்தில் ஈடுபட்டும் பொது விவாதத்திலும் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
விவேக் ராமசாமிக்கு ஆதரவு
இந்த பிரசார நடவடிக்கைளிலும் ஆரம்பத்திலிருந்து விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருவதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தது.
ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி காரசாரமாக முறையில் விவாதம் நடந்தது.
விவாதத்தில் கிறிஸ்டி மற்றும் நிக்கி ஹாலே ஆகியோர் மிகவும் மோசமான அணுகுமுறையை கடைப்பிடித்ததாக விவேக் ராமசாமி குற்றஞ்சாட்டினார்.
மேலும், மிகவும் வெப்பமான ஆண்டாக 2023ஆம் ஆண்டு பதிவாகியிருந்தால், காலநிலை மாற்ற நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராக விவேக் ராமசாமி கருத்தை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.