பிரித்தானியாவில் 7 வயது சிறுவனின் தந்தை வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்: அடையாளங்களை வெளியிட்ட பொலிஸார்
பிரித்தானியாவில் 7 வயது மகன் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதி குறித்து தெரிந்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கார் மோதி விபத்து
பிரித்தானியாவின் கென்ட்(Kent) பகுதியில் தன்னுடைய 7 வயது மகன் வில்லியம் பிரவுன் மீது காரை இடித்து விட்டு தப்பிச் சென்ற சாரதி குறித்து தெரிந்தவர்கள் உடனடியாக அவரை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு அவரது தந்தை வில்லியம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை 5.35 மணியளவில் கென்ட்டின், ஃபோக்ஸ்டோன்(Folkestone) சாண்ட்கேட் எஸ்பிளனேட்(Sandgate Esplanade) பகுதியில் 7 வயது சிறுவன் வில்லியம் பிரவுன் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.
பின்னர், இந்த விபத்தில் சிறுவன் வில்லியம் பிரவுன் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. தந்தை வேண்டுகோள் இந்நிலையில் சிறுவனின் கால்பந்து ஜெர்சியுடன் தந்தை உருக்கமாக பேசி KentOnline வெளியிட்டு இருந்த வீடியோவில், என் மகன் மீது காரை ஏற்றி விட்டு தப்பிச் சென்ற நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள்.
ஒருவேளை அது நீங்களாகவே இருந்தால், சிறுவன் வில்லியம் பிரவுன் மிகவும் அழகான சிறுவன், அத்துடன் அனைத்தையும் மன்னிக்கும் பண்பு கொண்டவர், எனவே உங்களை நாங்கள் ஏற்கனவே மன்னித்து விட்டோம், ஆனால் எங்களுடைய மகனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு தெரிய வேண்டும் என பேசியுள்ளார்.
இதற்கிடையில் ப்ராஸ்பெக்ட் சாலை விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றது சிவப்பு Citroen கார் என்றும், கார் ஆனது Hythe நோக்கி சென்றதாகவும் விவரங்களை வெளியிட்டு, விவரம் அறிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.