மேலும் 5 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி
மேலும் 5 நாடுகளுக்கு பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
கொமோரோஸ், மடகாஸ்கர், ஈக்குவடோரியல் கினியா, எகிப்து மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு வெவ்வேறு அளவுகளில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விலையை சரிபார்க்கவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வது ஜூலை 20ஆம் திகதி தடை செய்யப்பட்டது.
முன்னதாக, நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ், சீஷெல்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இதுபோன்ற அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை (7 டிசம்பர்) மாலை தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம், Comoros, Madagascar, Equatorial Guinea, Egypt மற்றும் Kenya ஆகிய ஐந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) தெரிவித்துள்ளது.
கொமோரோஸ் நாட்டுக்கு 20,000 மெட்ரிக் டன், மடகாஸ்கருக்கு 50,000 மெட்ரிக் டன், ஈக்குவடோரியல் கினியாவிற்கு 10,000 மெட்ரிக் டன், எகிப்து நாட்டிற்கு 60,000 மெட்ரிக் டன் மற்றும் கென்யாவிற்கு 1,00,000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது.