இந்திய விமானப்படை தளத்தில் ரகசிய சுரங்கப்பாதை., பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹிண்டன் விமான தளத்தில் 4 அடி ஆழமான சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் காஜியாபாத் நகரத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தின் சுவர் அருகே 4 அடி ஆழமுள்ள சட்டவிரோத சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டள்ளது.
விமானப்படை தளத்தின் பாதுகாப்பை மீறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால், இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விமானப்படை தளத்தின் அருகே இர்ஷாத் காலனியில் வசிப்பவர்கள் சுரங்கப்பாதையை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்திய விமானப்படையின் புகாரின் பேரில் திலா மோட் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
Intelligence Bureau, உத்தர பிரதேசத்தின் Anti Terrorist Squad (ATS) மற்றும் ராணுவ புலனாய்வு குழுக்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. அதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
Trans Hindon DCP Shubham Patel, விமானப்படைத் தளச் சுவர் முற்றிலும் அப்படியே உள்ளதாகவும், உடைந்ததற்கான எந்த தடயமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். ஹிண்டன் மேற்கு விமானப்படையின் முக்கிய விமான தளமாகும். இது ஆசியாவிலேயே மிகப்பாரிய விமான தளமாகும்.