;
Athirady Tamil News

நாட்டில் 20 ஆயிரம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

0

நாட்டில் இவ்வருடம் 20,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவர் ஆலோசகர் வைத்தியர் நெதாஞ்சலி மபிடிகம தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் கருவுற்ற பெண்கள் கூடுதலாக வன்முறைக்கு ஆளாகுவதாக தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) தடுப்பதற்கான தேசிய செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு செயலமர்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் தலைவி வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவி தலதா அத்துகோரள ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வீடுகள் மற்றும் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைத் தடுப்பதற்கு திட்டங்கள் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகத்தின் கீழ், 18 துறைகளில் கவனம் செலுத்தும் 13 அமைச்சகங்களின் செயற்திட்டங்கள் தொடர்பாக இந்த பல்துறை தேசிய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.