விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து நீதிமன்றின் உத்தரவு
சிறிலங்கா அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் தலைமையிலான நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
176 மருத்துவர்களால் மனு தாக்கல்
அரச சேவையில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் 60 வயதில் ஓய்வுபெறச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து வைத்தியர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கும் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்த்து 176 மருத்துவர்களால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம், சுகாதார அமைச்சு மேலும் அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.