;
Athirady Tamil News

கனடாவில் கிர்ணி பழத்தில் பயங்கர கிருமிகள்: ஆறாவது நபர் உயிரிழப்பு

0

கனடா மற்றும் அமெரிக்காவில், கிர்ணி பழங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அப்பழங்களை உண்ணவேண்டாம் என உணவு பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

கனடாவில் 153 பேருக்கு பாதிப்பு
கனடாவில் பாதிப்புக்குள்ளான கிர்ணி பழத்தை உண்ட 153 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கிர்ணி பழங்களில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதே பிரச்சினைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

ஆறாவது நபர் உயிரிழப்பு
இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிர்ணி பழத்தை உண்ட ஆறு பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கனடா சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது.

பொதுவாக இந்த சால்மோனெல்லா கிருமி, கோழிக்கறியுடன் தொடர்புடையதாகும். சரியாக வேகவைக்கப்படாத கோழிக்கறியை உண்பவர்களுக்கு இந்த கிருமி பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு.

அதே நேரத்தில், இந்த கிருமி பச்சைக்காய்கறிகள், பழங்களிலும் காணப்படலாம்.

எந்தெந்த தயாரிப்புகளில் பாதிப்பு?
கனடாவைப் பொருத்தவரை, Malichita மற்றும் Rudy என்னும் நிறுவனத் தயாரிப்புகளில் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இந்த நிறுவனத் தயாரிப்புகளை உண்ணவேண்டாம் என்றும் கனடா உணவு பரிசோதனை ஏஜன்சி எச்சரித்துள்ளது.

அக்டோபர் 11ஆம் திகதிக்கும் நவம்பர் 14ஆம் திகதிக்கும் இடையில் விற்கப்பட்ட Malichita நிறுவன பழங்களிலும், அக்டோபர் 10ஆம் திகதிக்கும் நவம்பர் 24ஆம் திகதிக்கும் இடையில் விற்கப்பட்ட Rudy நிறுவன பழங்களிலும் பாதிப்பு உள்ளதாக உணவு பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.