சரக்குக் கப்பலில் யேமன் கிளா்ச்சியாளா்கள் மீண்டும் தாக்குதல்
செங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த மேலும் ஒரு சரக்குக கப்பல் மீது யேமன் கிளா்ச்சியாளா்கள் வியாழக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினா்.
இதில் அந்தக் கப்பல் சேதமடைந்தது.
இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:
லைபீரியா கொடியுடன் செங்கடலில் வந்து கொண்டிருந்த ‘எம்எஸ்சி பிளாட்டினம் 3’ என்ற சரக்குக் கப்பலை நோக்கி வெள்ளிக்கிழமை ஏவுகணை வீசப்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல்-மண்டெப் நீரிணைக்கு அருகே அந்தக் கப்பல் வந்துகொண்டிருந்தபோது, ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் பகுதியிலிருந்து அந்த ஏவுகணை வீசப்பட்டது.
இதில் அந்தக் கப்பல் சேதமடைந்தது. எனினும், அதிலிருந்தவா்கள் காயமடைந்தனரா என்பது குறித்து தகவல் இல்லை.

முன்னதாக, அல் ஜாஸ்ரா என்ற சரக்குக் கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்தது.
இரு கப்பல்களையும் நோக்கி வீசப்பட்ட மேலும் ஓா் ஏவுகணை குறிதவறி கடலுக்குள் விழுந்தது என்று அதிகாரிகள் கூறினா்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான போா் தொடங்கியதிலிருந்து, யேமனையொட்டிய கடல் பகுதி வழியாகச் செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
கடந்த திங்கள்கிழமை இரவுகூட, நாா்வே கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பலொன்றின் மீது யேமன் நாட்டின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினா். எனினும், இதில் யாரும் காயமடையவில்லை என்று அந்தக் கப்பலை இயக்கி வரும் நிறுவனம் தெரிவித்தது.
அதனைத் தொடா்ந்து, இந்தியாவிலிருந்து ஜெட் விமான எரிபொருளை ஏற்றிக்கொண்டு பால் எல்-மண்டொ் நீரிணைக்கு அருகே வந்துகொண்டிருந்த மாா்ஷல் ஐலண்ட் கொடியேற்றிய எண்ணெய்க் கப்பலை நோக்கியும் ஹூதி கிளா்ச்சியாளா்கள் 2 ஏவுகணைகளை புதன்கிழமை வீசினா். அந்த ஏவுகணைகளும் குறிதவறி கடலில் விழுந்தன.
பின்னா் ஓமனிலிருந்து ஹாங்காங் கொடியுடன் செங்கடலில் வந்து கொண்டிருந்த ‘மாயா்ஸ் ஜிப்ரால்டா்’ என்ற சரக்குக் கப்பலை நோக்கி வியாழக்கிழமை ஏவுகணை வீசப்பட்டது.
இதுபோன்ற தாக்குதல்களால் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கோ, காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு ராணுவரீதியில் எந்தப் பலனும் இல்லை என்றாலும், யேமனில் தங்களுக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காக கிளா்ச்சியாளா்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.