;
Athirady Tamil News

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்புற இடம்பெற்ற நூல்வெளியீடு

0

கல்வி மற்றும் கலாசார பன்முகத்தன்மையின் முக்கியமான நிகழ்வாக , ஆசிய பட்டய டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிறுவனம் (ACIDM) இலங்கையின் புகழ்பெற்ற பேராசிரியர் நளின் அபேசேகரவின் படைப்பான ‘மார்க்கெட்டிங் தமிழில்’ நூல் பதிப்புரிமை மற்றும் வெளியீட்டை பெருமையுடன் அறிவித்தது.

இணை எழுத்தாளர் திருமதி பிரமிலா கதிர்காமர் (இயக்குநர், GIMED (PVT) LTD), மொழிபெயர்ப்பு மற்றும் தழுவலுக்கு பங்களித்துள்ளார்.

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் கேட்போர் கூடத்தில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறை, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் கேட்போர் கூடத்தில் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி இந் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். கண்ணதாசன், பேராசிரியர் வி.கெங்காதரன் (பீடாதிபதி, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடம் ), சந்தைப்படுத்தல் துறைத் தலைவர் , பேராசிரியர் எஸ் ஷிவானி உட்பட பல துறைசார்ந்த கல்வியியலாளர்கள் கலந்துகொண்டனர்.

நூலின் மதிப்பீட்டு ஆய்வை பேராசிரியர் சிவானந்தமூர்த்தி சிவேசன் (தலைவர், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை ) வழங்கியிருந்தார்.

நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது
மேலும் கலாநிதி எஸ். டிலோஜினியின் (சிரேஷ்ட விரிவுரையாளர், சந்தைப்படுத்தல்துறை) நெறியாள்கையில் இந்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. மற்றும் இலங்கையின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தந்திரோபாயநிபுணர் திரு ஸ்ரீஸ்காந்தன் ஷரன் (SharanCX) மற்றும் திருமதி எஸ். கலாவதி (CAO – கல்வித்துறை – ACIDM), ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்புப்பிரதிகள்
தொழில் வல்லுனர்கள், மற்றும் சிறிய நடுத்தர வணிக முயற்சியாளர்களின் உற்சாகமான பங்கேற்பு இந் நிகழ்வின் வெற்றிக்கு வழிவகுத்தது. இந் நிகழ்வில் கலாநிதி எஸ். சிவராயா, கே. கந்தவேள் (உதவிப் பணிப்பாளர் – இலங்கை திறந்த பல்கலைக்கழகம்,, யாழ்ப்பாண பிராந்திய நிலையம்) ரவிச்சந்திரன் (இயக்குநர்: வலயக் கல்வித் திணைக்களம், யாழ்ப்பாணம்), மற்றும் கோகுலன் (இயக்குநர்: SLIATE யாழ்ப்பாணம்), ஷாம் (இயக்குநர், கணக்கீட்டு ஆசிரியர் – DMI), திருமதி ரஜூலாதேவி (முன்னாள் தாதியர் கல்விப் பணிப்பாளர்), மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்புப்பிரதிகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

‘மார்க்கெட்டிங் தமிழில்’ படைப்பானது சிறிய நடுத்தர மற்றும் வணிக முயற்சியாளர்களின் சந்தைப்படுத்தல் ஆய்வினை தூண்டும் வகையில் மரபு வழிக்கதை சொல்லும் வழி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இந் நூலில் எளிமை, அமைப்பு, குறுகிய நேரத்தில் அறிவைப்பெற்றுக்கொள்ளும் தன்மை என்பன அனுபவமுள்ள தொழில்முனைவோருக்கு, வணிக உலகில் புதிதாக உட்பிரவேசிப்பவர்களுக்கும் பயன்படக்கூடிய ஒரு படைப்பென்பதை உறுதிகொள்ள முடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.