;
Athirady Tamil News

இறந்தவர்களுடன் இனி பேசலாம்… செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாராகும் திட்டம்

0

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள, ரகசியமாக பரிசோதனைகள் நடந்துவருவதாக தெரிவித்துள்ளார் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவர் ஒருவர்.

வாழும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள்
எலிசபெத் மகாராணியின் மரணம், கோவிட் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஏதோஸ் (Athos Salomé).

இறந்தவர்களுடன் இனி பேசலாம்…
எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பல்வேறு விடயங்களைக் கணித்துக் கூறும் ஏதோஸ், தற்போது இறந்தவர்களுடன் தொடர்பு கொள்வதைக் குறித்த ஒரு விடயம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது, உலகம் முழுவதும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள, ஆங்காங்கே சிலர் ரகசியமாக பரிசோதனைகள் நடத்திவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வகையில், சிலர் வரலாற்றில் கடந்த காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற நபர்களுடன் தொடர்புகொண்டுள்ளார்களாம். புகழ் பெற்ற ஜேர்மன் மந்திரவாதியான Heinrich Cornelius Agrippa von Nettesheim, பிரெஞ்சு கணித மேதையான René Descartes ஆகியோரை இந்த செயற்கை தொழில்நுட்பம் உதவியுடன் தொடர்பு கொள்ள முடிந்ததாக தெரிவிக்கும் ஏதோஸ், மக்கள் இனி இறந்த தங்கள் அன்பிற்குரியவர்களுடன் பேசும் காலம் நெருங்கிவருகிறது என்றும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.