;
Athirady Tamil News

விபரீத முடிவெடுத்த கோப்பாய் குடும்பப் பெண் மரணம்

0

வாய்த்தர்க்கம் முற்றியதில் விபரீத முடிவெடுத்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
|
இதில் கோப்பாய் சேர்ந்த கஜேந்திரன் தர்சினி (வயது-41) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.

கணவன் மனைவிக்கு இடையில் வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கடந்த 7ஆம் திகதி குறித்த பெண் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார்.

தீக்காயத்துக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.