யாழில் தொடர் மழையால் பெரும் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக நான்கு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் இன்று (18.12.2023) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடு பகுதியளவில் சேதம்
அத்துடன் மழை அனர்த்தத்தினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. உடுவில் தெற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/205 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த 06 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/ 261, ஜே/276, ஜே/285, ஆகிய கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஜே/261 கிராம சேவகர் பிரிவில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 38.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.