;
Athirady Tamil News

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

0

3 கோடி கிமீ தொலைவில் உள்ள விண்கலத்தில் இருக்கும் பூனையின் காணொளியை பூமிக்கு அனுப்பி NASA மாபெரும் சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் National Aeronautics and Space Administration (NASA) சமீபத்தில் 19 மில்லியன் மைல்கள் (3.1 கோடி கிலோமீட்டர்) தொலைவில் உள்ள விண்கலத்திலிருந்து HD தரத்தில் காணொளியை அனுப்ப லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக அறிவித்தது. அந்த வீடியோவில் பூனை ஒன்று ஒளியை துரத்துவது பதிவாகியுள்ளது.

நாசா காணொளியை ட்வீட் செய்து, விண்வெளியில் இருந்து Laser மூலம் முதல் Ultra HD Videoவை நாங்கள் ஸ்ட்ரீம் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இது டேட்டர்ஸ் (Taters) என்ற orange tabby பூனையின் வீடியோ. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது போன்ற பணிகளுக்கு உதவும் வகையில் இந்த சோதனை உதவும்.

இந்த காணொளியை ஒளிபரப்ப, நாசா, செவ்வாய் மற்றும் வியாழன் (Mars and Jupiter) இடையே உள்ள முக்கிய சிறுகோள் பெல்ட்டில் சிறப்புக் கண்டுபிடிப்பின் பயணத்தில் இருக்கும் சைக் ஆய்வில் (Psyche probe) இருக்கும் laser transceiverஐ பயன்படுத்தியது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 80 மடங்கு தொலைவில் இருந்து இந்த காணொளி அனுப்பப்பட்டுள்ளது.

267 MBPS (Megabyte per second) வேகத்தில் காணொளி சிக்னல் பூமியை வந்தடைய 101 வினாடிகள் எடுத்துக் கொண்ட Flight Laser Transceiver எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் நாசாவின் இந்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

நாசாவின் இந்த சோதனை வெற்றியடைந்தால், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது போன்ற கடினமான பணிகளில் தேவைப்பட்டால் தகவல் பரிமாற்றம் மற்றும் தரவுகளை விரைவாக பரிமாற்றம் செய்ய முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.