;
Athirady Tamil News

மிதக்கும் தென்மாவட்டங்கள் – ஆளுநர் ஆலோசனையில் பங்கேற்காத தமிழக அரசு..!!

0

வெள்ள பாதிப்புகளில் மீட்பு பணிகள் துரிதமாக தமிழக அரசு ஒருங்கிணைப்பு இல்லாததால் மேற்கொள்ள முடியவில்லையென என கவர்னர் மாளிகை வருத்தம் தெரிவித்துள்ளது.

வெள்ள – மழை பாதிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற 4 மாவட்டங்களை கனமழையினால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. பல ஊர்கள் வெள்ள நீரில் சிக்கி தனி தீவு போல காட்சியளிக்கிறது. மீட்பு பணியில் தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ள நிலையில், இன்னும் மீட்புப்பணிகளில் தீவிரம் வேண்டும் என்றும் பல தரப்பில் இருந்து கோரிக்கைகளை எழுந்து வருகின்றன.

ஆளுநர் ஆலோசனை இந்நிலையில், வெள்ள பாதிப்பு குறித்து ஆளுநர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதில் அரசு தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆளுநர் மளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் அவர்கள், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை சென்னை, ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

ஆளுநர் மளிகை வருத்தம்
இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டபோதும் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் வரவில்லை. மழை பாதிப்பால் குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசுத்துறைகள், அவற்றின் வளங்களை மாநில அரசு அழைத்தவுடன் பணியாற்றும் வகையில் தயாராக வைத்துள்ளன.

மேலும் மாநில அரசால் கோரப்படும்போது அவை பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின்படியும் தேவைக்கேற்ப இயன்ற வகையில் சொந்தமாகவும் அவை மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுகின்றன.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாக தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாக கவலை தெரிவித்தன. தற்போதுள்ள மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூடுதல் வளங்களை கையிருப்பில் வைத்திருக்குமாறு அவர்களை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.